Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#IPL10 - வென்றது குஜராத்... ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா பஞ்சாப்..?

ஐபிஎல் 10-வது சீசனின் 47-வது போட்டியில், அதிரடி ரன் குவிப்புக்கு பெயர்போன இரண்டு அணிகளான குஜராத் மற்றும் பஞ்சாப் பலப்பரீட்சை செய்தன. ரெய்னா தலைமையிலான குஜராத் அணி, புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால், பஞ்சாப் அணி 10 புள்ளிகளுடன் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பு பட்டியலில் இருக்கிறது.

இந்நிலையில், வெற்றிபெற்று ப்ளே-ஆஃப் சுற்றுக்கான தகுதியை உறுதி செய்யும் முனைப்புடன் பஞ்சாப் அணியும், கடைசி சில போட்டிகளிலாவது எதிர் அணியை தோல்வியடையச் செய்யும் எண்ணத்துடன் குஜராத் அணியும் களமிறங்கின.

டாஸ் வென்ற குஜராத், முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரரில் ஒருவரான ஹசீம் அம்லா, அதிரடியாக விளையாடி 60 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். ஷான் மார்ஷ் அரை சதம் விளாசினார். இதையடுத்து, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது.

190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய குஜராத் அணி, தொடக்கம் முதலே பஞ்சாப் பவுலர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தன. இதனால், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 19.4 ஓவர்களில் எட்டிப் பிடித்து, பஞ்சாப் அணியின் ப்ளே-ஆஃப் கனவுக்கு சமாதி கட்டியது. குஜராத் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ட்வெய்ன் ஸ்மித் 39 பந்துகளில் 74 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.

 இந்தப் போட்டியின் முடிவில், புள்ளிகள் பட்டியலில் பஞ்சாப் அணி தொடர்ந்து 5-வது இடத்திலும், குஜராத் அணி 7-வது இடத்திலும் நீடித்து வருகின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close