Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ.

இந்தியா

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகளை வைத்து சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஜூன் மாதம் இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் தொடங்கவுள்ளன. ஐசிசியுடன் நிதி விவகாரம் தொடர்பாக நிலவி வந்த பிரச்னையால் இந்திய அணி பங்கேற்பது பற்றி அறிவிக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து பிசிசிஐ தரப்பில் இந்தியா இத்தொடரில் விளையாடும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் வீரர்களின் விவரத்தை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, ரஹானே, யுவராஜ் சிங், தோனி, கேதர் ஜாதவ், ஹார்திக் பாண்டியா, அஷ்வின், ஜடேஜா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், மனிஷ் பாண்டே, பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஜூன் 4-ம் தேதி முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடுகிறது இந்தியா. இதனிடையே பிசிசிஐ அறிவிக்கப்போகும் இந்திய அணி குறித்த கணிப்பை நேற்று விகடன் வெளியிட்டிருந்தது. இந்த கணிப்புடன் ஒத்துப்போகிறது பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பு.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close