Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தோனிதான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்!' - சொல்வது யார் தெரியுமா?

MS Dhoni

 ஜூன் மாதம் தொடங்க உள்ளது, சாம்பியன்ஸன் டிராபி போட்டி. ஐசிசி-க்கும் பிசிசிஐ-க்கும் இருந்த பனிப் போர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதால், குழப்பங்கள் தீர்ந்து, நடப்பு சாம்பியனான இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 15 பேர்கொண்ட இந்திய அணியைத் தேர்ந்தெடுத்த பிசிசிஐ-ன் பட்டியலில், ஐபிஎல் போட்டிகளில் நன்றாக விளையாடி வரும் கம்பீர் மற்றும் ரெய்னா போன்றவர்கள் இல்லாதது, விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

மேலும், தோனியின் தற்போதைய ஃபார்ம் மற்றும் வயதைk கணக்கில்கொண்டு, அவருக்குப் பதிலாக இளம் விக்கெட் கீப்பர் வேறு ஒருவரைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டுவருகிறது. 2016-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து தோனி விளையாடிய 13 ஒருநாள் போட்டிகளில், 34.07 சராசரியில் 443 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இது, அவரது வழக்கமான பேட்டிங் சராசரியைவிட மிகக் குறைவு.

MSK Prasad

 பிசிசிஐ தேர்வுக் குழுவின் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் செய்தியாளர்களைச் சந்திப்பில், 'தேர்வுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் தோனிதான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் என்று நம்புகிறோம். அவர், அணிக்கு மிகவும் மதிப்பு மிக்கவர். நெருக்கடியான நேரங்களில் அவரின் யோசனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். கிரிக்கெட்டைப் பற்றி மிகச்சிறந்த அறிவாற்றல் அவரிடம் இருக்கிறது. விராட் கோலியை வழிநடத்த அவர்தான் சரியான நபர். கடந்த 10 ஆண்டுகளாக அவர் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பி நான் பார்த்ததே இல்லை'' என்று தோனியின் தேர்வு குறித்து விரிவாகப் பேசியுள்ளார். 

விராட் கோலி, ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், யுவராஜ் சிங், ரஹானே, மனிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அஷ்வின், புவனேஷ்வர் குமார், பூம்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோர்கொண்ட 15 பேர் குழு, இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராயில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close