Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#KXIPvKKR பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா பஞ்சாப்? கொல்கத்தாவுக்கு 168 ரன்கள் டார்கெட்!

ஐபிஎல் 10-வது சீசனில், மொஹாலியில் இன்று நடக்கும் போட்டியில் கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 

Punjab

கொல்கத்தா அணி ஏற்கெனவே கெத்தாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டும், என்ற கட்டாயத்துடன் களமிறங்கியுள்ளது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி, முதலில் பெளலிங் செய்தது. இதையடுத்து, முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி சற்று நிதானமாக ஆடியது.


மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில், கேப்டன் மேக்ஸ்வெல் மற்றும் சாஹா அதிரடி காட்டினர்.  சாஹா 38, மேக்ஸ்வெல் 44 ரன்கள் எடுத்து, பெவிலியன் திரும்பினர். இதனால், 20 ஓவர்களின் முடிவில், பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் வோக்ஸ், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.


இதைத் தொடர்ந்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி சற்று நேரத்தில் களமிறங்க உள்ளது. 12 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா, அவற்றில் 8-ல் வெற்றிபெற்று, புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. 11 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி, 5-ல் வெற்றிபெற்று, புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close