Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#KXIPvsKKR - ப்ளே ஆஃப் கனவை தக்கவைத்த பஞ்சாப்... கொல்கத்தா அதிர்ச்சி தோல்வி!

ஐபிஎல் 10-வது சீசனின் லீக் போட்டிகள் முடியும் தருவாயில் இருக்கின்றன. டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் வெளியெறுவது முடிவாகிவிட்ட நிலையில், மீதம் இருக்கும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறவும், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கவும் முனைப்புக்காட்டி வருகின்றன.

இந்த விறுவிறுப்பான சூழலில், புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணியும், ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பில் இருக்கும் பஞ்சாப் அணியும் மோதின.

டாஸ் வென்ற கொல்கத்தா, பௌலிங் செய்யத் தீர்மானித்தது. இதையடுத்து, களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள், அதிக ரன்கள் சேர்க்காமல் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். பின்னர், பஞ்சாபின் விக்கெட் கீப்பர் சஹா மற்றும் கேப்டன் க்ளென் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டவே, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி, மதிக்கத்தக்க ஸ்கோரான 167 ரன்களை எடுத்தது.

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது, வலுவான பேட்டிங் ஆர்டரைகொண்ட கொல்கத்தா. அந்த அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான க்றிஸ் லின் 52 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். ஆனால், அவரைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் பொறுப்பாக விளையாடாத காரணத்தால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தப் போட்டியில் வென்றதன்மூலம், பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. கொல்கத்தா அணியும் புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடித்துவருகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close