Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அணியில் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது' : ரெய்னா வேதனை

சாம்பியன் ட்ராஃபி தொடருக்கான, இந்திய அணி கடந்த திங்கள் கிழமை அறிவிக்கப்பட்டது. இதில், நீண்ட நாள்களுக்குப் பின் சுரேஷ் ரெய்னா இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அணியில் அவர் பெயர் இடம்பெறவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், ரெய்னா கடைசியாக ஒரு நாள் போட்டியில் விளையாடியுள்ளார்.

Raina


தற்போது, ஐபிஎல் போட்டிகளில், குஜராத் அணிக்கு தலைமை தாங்கி வருகிறார் ரெய்னா. இந்நிலையில், சாம்பியன் ட்ராஃபிக்கு தேர்வு செய்யப்படாதது குறித்து ரெய்னா 'Hindustan Times' பத்திரிகைக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர், "என்ன சொல்வது? அணியில் இடம் பெறாதது ஏமாற்றமாகவும், வருத்தமாகவும்தான் உள்ளது.

இந்நேரத்தில் அணியில் கம்பேக் கொடுப்பேன் என்று நினைத்தேன். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன். ஐபிஎல்லிலும் எனது திறமையை நிரூபித்து வருகிறேன். இது ஓர் எதிர்பார்த்த முடிவு இல்லை. நிச்சயமாக இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுப்பேன்.

தற்போதுள்ள சூழ்நிலைக்கு மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாட நினைக்கிறேன். என்னால், எவ்வளவு ரன்கள் எடுக்க முடியுமோ, எடுத்து, அணியை வெற்றி பெறச் செய்ய முயற்சி செய்வேன்" என்று கூறியுள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close