Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#MIvsKXIP பஞ்சாப் அணி அடிபொலி..! மும்பைக்கு 231 ரன்கள் டார்கெட்

ஐபிஎல் 10-வது சீசனில், இன்று நடைபெறும் 51-வது போட்டியில் மும்பை - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை அணி ஏற்கெனவே, ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விட்டது. ஆனால், பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது. 

Saha


டாஸ் வென்ற மும்பை அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்தது. போட்டி, மும்பையில் நடந்தாலும் பஞ்சாபின் கையே ஓங்கியது. அந்த அணிக்கு முக்கியமானப் போட்டி என்பதால், ஆரம்பம் முதலே பஞ்சாப் அணி அடித்து ஆடியது. துவக்க ஆட்டக்காரர் கப்டில் 36 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

ஆனால், மற்றொரு துவக்க ஆட்டக்காரரான சாஹா அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். அவருடன் கேப்டன் மேக்ஸ்வெல்லும் இணைந்து அதிரடி காட்டினார். ஒரு கட்டத்தில் பும்ரா பந்தில், மேக்ஸ்வெலும் பெவிலியன் திரும்பினார். ஆனால், சாஹா விட்டுக் கொடுப்பதாய் இல்லை. கடைசி ஓவர் வரை தொடர்ந்து அதிரடி காட்டினார் சாஹா.

இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்தது. சாஹா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 93 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 231 ரன்கள் எடுத்தால் வெற்றி, என்ற கடினமான இலக்குடன் மும்பை அணி சற்று நேரத்தில் களமிறங்க உள்ளது.

மும்பை அணியின் பேட்டிங் லைன்-அப் ஸ்ட்ராங்காக உள்ளதால், அந்த அணி வெற்றி பெறவும் வாய்ப்பு உள்ளது. 

படம் : BCCI

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close