Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#IPL10 - மும்பை அணியை வென்று ப்ளே ஆஃப் கனவை தக்கவைத்த பஞ்சாப்!

வரும் ஞாயிற்றுக் கிழமையுடன் நிறைவடைகிறது ஐபிஎல் 10-வது சீசனின் லீக் போட்டிகள். ஆனால், மும்பை அணியைத் தவிர யாரெல்லாம் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவர் என்பதில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது. 

இன்று ஐபிஎல் 10-வது தொடரின் 51-வது போட்டியில், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மும்பை அணியும், ஐந்தாவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணியும் மோதின.

போட்டிக்கான டாஸை வென்ற மும்பை அணி, பவுலிங்கைத் தேர்ந்தெடுத்து பஞ்சாபை பேட்டிங் ஆடச் சொல்லி பணித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பஞ்சாப், முதல் ஓவரிலிருந்தே அதிரடி காட்டியது. தொடக்க வீரர்களின் ஒருவரான மார்ட்டின் கப்டில் 18 பந்துகளில் 36 ரன்கள் எடுக்க, இன்னொரு தொடக்க வீரர் சஹா, 55 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்கமால் இருந்தார். கேப்டன் க்ளேன் மேக்ஸ்வெல் 21 பந்துகளில் 47 எனக் களமிறங்கிய அத்தனை பேட்ஸ்மேன்களும் அதிரடி ஒன்றே குறிக்கோளென மும்பை அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் வெறும் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து பஞ்சாப் 230 ரன்கள் குவித்தது.

இதையடுத்து அதிரடி ஆட்டம் ஒன்றே வெற்றி பெற வழி என்ற எண்ணத்தில் மும்பை இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கியது. அந்த அணியின் ஓபனர்களான சிம்மன்ஸ் மற்றும் பார்த்திவ் படேல் முறையே 59 மற்றும் 38 ரன்கள் எடுத்தனர். நல்ல அடித்தளத்தைப் பயன்படுத்திய மும்பை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அணியின் ஸ்கோரை 200-ஐ தாண்ட வைத்தனர். இருந்தும் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், பஞ்சாப் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் கனவை உயிர்ப்போடு வைத்துள்ளது. மும்பை அணி தொடர்ந்து பாய்ன்ட்ஸ் டேபிள் டாப்பராக வளம் வந்து கொண்டிருக்கின்றது. பஞ்சாப் 5-வது இடத்தில் நீடித்து வருகின்றது.  

நன்றி: IPL
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close