Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தோனி ஒரு ஆல் இன் ஆல்' - சக அணியினரின் புகழாரம்!

இந்த ஐபிஎல் சீசனில், புனே அணி தொடக்கத்தில் வெற்றிபெற மிகவும் திணறியது. அதேபோல, அந்த அணியில் இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் ரன் எடுக்க சிரமப்பட்டார். ஆனால், ஐபிஎல் லீக் போட்டிகளின் பிற்பகுதியில், வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கியது புனே. தோனியும் அதிரடி ரன் ஸ்கோரிங்கில் ஈடுபட்டார்.

தற்போது, ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறும் அளவுக்கு புனே அணியின் வளர்ச்சி உள்ளது. இந்நிலையில், புனே அணியிலுள்ள மனோஜ் திவாரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ''புனே அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு தோனி எப்படி உதவிகரமாக உள்ளார் என்பதைப் பற்றி நான் சொல்லவேண்டியதில்லை. புனே அணியின் போட்டியைப் பார்க்கும் ஒவ்வொரு ரசிகருக்கும் அது நன்றாகத் தெரியும். தோனி, விக்கெட் கீப்பராக இருப்பதால், மற்ற வீரர்களை வழிநடத்துவது எளிதாக உள்ளது. ஸ்மித்துக்கு மட்டுமல்ல, மற்ற வீரர்களுக்கும் அவர் மிக உதவிகரமாக இருக்கிறார். களத்தில் ஃபீல்டர்களைக் கட்டுப்படுத்துவதில் அவர் சிறப்பாகப் பங்காற்றுகிறார். ஸ்மித்தும் களத்தில் பன்மடங்கு அழுத்தத்துடன்தான் விளையாடுகிறார். எனவே, கேப்டனின் அழுத்தத்தை தோனி பெருமளவு குறைக்கிறார்'' என்று தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

 புனே அணியின் சக வீரர்களும் தோனியை ஆல் இன் ஆல் என நெகிழ்ச்சியுடன் புகழ்கிறார்கள். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close