Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆசிய மல்யுத்தம்: வெள்ளிப் பதக்கம் வென்றார் சாக்‌ஷி மாலிக்!

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஸ் போட்டியில் சாக்‌ஷி மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

சாக்‌ஷி

ஆசிய மல்யுத்தப் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக் இன்று இறுதிப்போட்டியில் கலந்து கொண்டார். ஜப்பான் வீராங்கனை ரிகாகோ கவாய்-ஐ எதிர்கொண்ட இவர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஒரு வருட இடைவேளிக்கு பின் மல்யுத்தத்தில் இறங்கியுள்ள சாக்‌ஷி மாலிக், ஜப்பான் வீராங்கனையிடம் 0-10 என்ற கணக்கில் தோல்வியடைந்துள்ளார்.

இதனிடையே 55 கிலோ பிரிவில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய வீராங்கனை வினேஷ் போகாத் ஜப்பான் வீராங்கனை சீ நான்ஜோவிடம் 4-8 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். உஸ்பெகிஸ்தான், சீன வீராங்கனைகளை வீழ்த்தி இவர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இந்தியாவை சேர்ந்த திவ்யா கக்ரன் 69 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கமும், ரித்தூ போகாத் 48 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close