Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#IPL10 - புனேவை வீழ்த்தியது டெல்லி... ப்ளே ஆஃப் சுற்றில் யாரெல்லாம் ஆடுவார்கள்?

இன்னும் இரண்டே நாளில் முடிவுக்கு வருகிறது ஐபிஎல் 10-வது சீசனின் லீக் போட்டிகள். அனைத்து அணிகளுக்கும் லீக் சுற்றில் தலா ஒரு போட்டிதான் பாக்கியுள்ளது. இருப்பினும், யாரெல்லாம் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறுவர் என்று கூற முடியாத நிலை நீடித்து வருகிறது.

ஐபிஎல் 10-வது தொடரின் 52-வது போட்டியில், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான புனே அணியும் ஜாகிர் கான் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்வதை உறுதிசெய்யும் நோக்கில் களமிறங்கியது புனே. லீக் ஆட்டங்களில் கடைசி இரு போட்டிகளில் வெற்றி பெற்று தன் பலத்தை நிரூபிக்கும் நோக்கில் களம் கண்டது டெல்லி.

டாஸ் வென்ற டெல்லி, முதலில் பேட்டிங் செய்தது. இதையடுத்து, அந்த அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான கருண் நாயர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரிஷப் பேன்ட் ஆகியோர் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் இருவரும் முறையே 64 மற்றும் 36 ரன்கள் எடுத்தனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. 

169 ரன்கள் எடுத்தால் வெற்றிபெற்று, ப்ளே ஆஃப் சுற்றில் தன் இடத்தை உறுதிசெய்துவிடலாம் என்ற எண்ணத்துடன் களமிறங்கியது புனே. தொடக்க வீரர்களான ரஹானே பூஜ்ஜியத்தில் வெளியேற, திரிபாதி 7 ரன்களில் அவுட்டானர். இதனால், முறையான தொடக்கம் கிடைக்காமல் தடுமாறியது புனே. பின்னர், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், மனோஜ் திவாரி மற்றும் பென் ஸ்டோக்ஸ் முறையே 38, 60 மற்றும் 33 ரன்கள் எடுத்தனர். கடைசி பந்து வரை சென்ற போட்டியில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு புனே அணியால் 161 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

டெல்லியின் இந்த வெற்றியால், ப்ளே ஆஃப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் தகுதிபெறும் என்பதில் தொடர் குழப்பம் நிலவுகிறது. புனே அணி தற்போது 3-வது இடத்தில் இருக்கிறது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close