Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புரோ கபடி : சென்னை அணியை 'அலேக்காக' தூக்கிய சச்சின்..!

ஐபிஎல் போட்டிக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, ஹாக்கி, கபடி, கால்பந்து, பேட்மின்டன் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் லீக் போட்டிகள் துவங்கப்பட்டன. கடந்த 2014-ம் ஆண்டு புரோ கபடி லீக் தொடங்கப்பட்டது. 

Sachin Tendulkar


டெல்லி, மும்பை, பெங்களூரு. கொல்கத்தா, ஹைதராபாத், பாட்னா, புனே மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய எட்டு அணிகள் இதில் பங்கேற்றன. ஆரம்பத்தில் இதற்கு பெரிய வரவேற்பு இல்லை என்றாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, அடுத்த தொடரில் இருந்து, தமிழ்நாடு, குஜராத், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய நான்கு அணிகள் புரோ கபடியில் மல்லுக்கட்ட உள்ளன.


முக்கியமாக, இதில் சென்னை அணியை வாங்கியுள்ளார், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். 'Iquest Enterprises' என்ற நிறுவனம் சென்னை அணியை வாங்கியுள்ளது. அந்த நிறுவனத்தில் சச்சின் டெண்டுல்கர் துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கிறார். மற்ற மூன்று நிறுவனங்களை  JSW குழுமம், அதானி குழுமம், GMR குழுமம் வாங்கியுள்ளன.


இந்த நான்கு அணிகளுக்கு, பெயர் வைக்கப்படவில்லை.சச்சின் டெண்டுகல்கர், ஐ.எஸ்.எல் போட்டியில், கேரளா அணியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close