Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வெற்றியும், அயர்லாந்து வீரரின் சாதனையும்!

அயர்லாந்து - வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி, அயர்லாந்து தலைநகர் டப்ளின் நகரில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இருமுறை மோதும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் அயர்லாந்து - வங்கதேசம் இடையே நடைபெற்றது. முதலில் பேட் செய்த வங்கதேசம் 31.1 ஓவர்களில் 157/4 என்ற நிலையில் இருக்கும்போது, தொடர் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டு,  இரு அணிகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்பட்டன.

இத்தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 289 ரன்கள் குவித்தது. அந்த அணியைச் சேர்ந்த வொர்கர் (50), டெய்லர் (52), ப்ரூம் (79) ஆகியோர் அரைசதம் அடித்தனர். பின்னர் விளையாடிய அயர்லாந்து அணி 45.3 ஓவர்களில் 238 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகவே, நியூசிலாந்து அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

நியூசிலாந்து - அயர்லாந்து

அயர்லாந்து அணியில், அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் நியல் ஓ பிரைன் 109 ரன்கள் எடுத்தார். இதுவரை 85 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள நியல் ஓ பிரைனின் முதல் சதம் இதுவாகும். இந்த முத்தரப்பு தொடரில் நியூசிலாந்து - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான அடுத்த போட்டி மே 17 அன்று டப்ளினில் நடைபெறவிருக்கிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close