Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முத்தையா முரளிதரனுக்கு மோடி கொடுத்த சர்ப்ரைஸ்!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடி தன்னுடைய சிறப்புரையில் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் குறித்து பெருமையாகப் பேசினார். இதனை தனக்குக் கிடைத்த பெரும் பரிசாகக் கருதுகிறார் முரளிதரன்.

முத்தையா முரளீதரன்

இலங்கையில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த மோடி, அங்கு இலங்கைத் தமிழர்கள் குறித்து கொழும்பு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். அதில் மோடி பேசியபோது, ’இலங்கைத் தமிழர் பகுதியில் இருந்துதான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், முன்னணி சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஆகியோர் தோன்றியுள்ளனர்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து முத்தையா முரளிதரன் கூறுகையில், ‘இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டின் பிரதம மந்திரி என்னைக் குறிப்பிட்டு பேசியதையே பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். என் சமூகத்தின் அடையாளமாக என்னை இந்தியப் பிரதமர் அங்கீகரித்துப் பேசியதைப் பெருமையாகக் கருதுகிறேன்’ எனக் கூறினார்.

மேலும் தனக்கும், இந்தியாவுக்குமான உறவு குறித்து பேசிய முரளிதரன், ‘எனக்கும் இந்தியாவுக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழகத்தில் சென்னையைச் சேர்ந்த பெண்ணை தான் திருமணம் செய்துள்ளேன். நாங்கள் தமிழகத்தையே பூர்விகமாகக் கொண்டவர்கள் தான்’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close