Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மும்பையைச் சுருட்டி ஃபைனலுக்கு முன்னேறியது புனே அணி! #MIvsRPSG

ஐ.பி.எல் பத்தாவது சீஸன் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. லீக் போட்டிகள் முடிந்து இன்று ப்ளே ஆஃப் போட்டிகள் தொடங்கின. புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றன. ப்ளே ஆஃப் சுற்றில் இன்று நடைபெற்ற குவாலிஃபயர் -1 ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - ஸ்மித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. 

புனே அணி

டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய புனே அணியில் ரஹானே, மனோஜ் திவாரி ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். தோனி 40 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருபது ஓவர்கள் முடிவில் புனே அணி நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. மும்பை அணி தரப்பில் மிச்சேல் மெக்லாகன், லசித் மலிங்கா, கம் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

அடுத்து 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. அந்த அணியின் வீரர் லெண்டில் சிம்மன்ஸ் ஐந்து ரன்களில் ரன் அவுட் ஆனார். பார்த்திவ் படேல் அரைசதம் அடிக்க, மறுமுனையில் மும்பை அணி வீரர்கள் தடுமாறினர். புனே அணியினரின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது மும்பை  அணி. கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி ஓவரில் மிச்சேல் மெக்லாகன் அவுட்டானார். இறுதியாக கடைசிப் பந்தில் மலிங்காவின் சிக்ஸரோடு முடிந்தது ஆட்டம். மும்பை அணி இருபது ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. புனே அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் அதிகபட்சமாக தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதன்படி புனே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் புனே அணி வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் ஃபைனலுக்கு நேரடியாகத் தகுதி பெறுகிறது. இந்த ஆட்டத்தில் தோல்வியுற்ற மும்பை அணிக்கு ஃபைனலுக்குத் தகுதி பெற இன்னொரு வாய்ப்பும் இருக்கிறது. மே 17-ம் தேதி பெங்களுரில் நடக்கவிருக்கும் எலிமினேட்டர் ஆட்டத்தில் வெல்லும் அணியோடு குவாலிஃபயர்-2 ஆட்டத்தில் பங்குபெற்று வெற்றிபெற வேண்டும். 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close