Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#MIvKKR ஐபிஎல் குவாலிஃபயர் 2 : கொல்கத்தா அணி பேட்டிங்..!

ஐபிஎல் 10-வது சீசன், பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த 16 ஆம் தேதி நடந்த முதல் குவாலிஃபயர் போட்டியில், மும்பையை வீழ்த்தி, புனே அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இதையடுத்து, நேற்று முன்தினம் நடந்த எலிமினேட்டர் போட்டியில், ஹைதராபாத்தை விரட்டி, கொல்கத்தா அணி குவாலிஃபயர் இரண்டாவது போட்டிக்கு முன்னேறியது. 

Mumbai, Kolkata

 இன்று நடக்கும் இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் மும்பை, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. பெங்களூரில் நடக்கும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி, பௌலிங்கை தேர்வுசெய்துள்ளது. கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. கொல்கத்தாவில் இரு மாற்றங்களும் மும்பையில் ஒரு மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கொல்கத்தாவில் யூசஃப் பதானுக்குப் பதிலாக, அன்கிட் ராஜ்கபூரும் போல்டுக்குப் பதிலாக, கலின் கிராண்ட் ஹோமும் களமிறங்கியுள்ளனர்.

மும்பை அணியில், மெக்லன்கனுக்குப் பதிலாக ஜான்சன் களமிறங்கியுள்ளார். இதில் வெற்றிபெறும் அணி, வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப் போட்டியில் புனே அணியுடன் மோதும்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close