Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வில்வித்தையில் தங்கப் பதக்கம்... : இந்தியா அசத்தல்!

வில்வித்தையின் முதல் உலகக் கோப்பை போட்டி சீனாவின் சாங்காய் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.

Archery


அபிஷேக் வர்மா, சின்ன ராஜூ ஶ்ரீதர், அமன்ஜித் சிங் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வந்தது. முன்னதாக நடந்த அரையிறுதியில் இந்திய அணி, அமெரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்தியது. விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் ஒரு கட்டத்தில் இந்திய அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் பின் தங்கி இருந்தது. ஆனால், விட்டுக் கொடுக்காத இந்திய அணி, தொடர்ந்து போராடி த்ரில் வெற்றி பெற்றது.


இதையடுத்து, இன்று நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி, கொலம்பியா உடன் மோதியது. இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய அணி 226-221 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் உலகக் கோப்பை அரங்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை பதிவு செய்துள்ளது.


அதேபோல், கலப்பு இரட்டையர்கள் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வெர்மா, ஜோதி சுரேகா, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், அமெரிக்கா உடன் மோத உள்ளது. 

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close