Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கால்பந்தில் இந்தியா வரலாற்றுச் சாதனை: ஜூனியர் ஆண்கள் அணியின் மகத்தான வெற்றி!

உலகக்கோப்பை கால்பந்தில் பதினேழு வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் முதன்முறையாக இந்திய அணி வென்று வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளது.

இந்திய ஹாக்கி அணி

படம்: AIFF Media team

இத்தாலியில் நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து, பதினேழு வயதுக்கு உட்பட்டோருக்கானப் போட்டியில் இத்தாலியை வீழ்த்தி முதன்முறையாக இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 2-0 என்ற கணக்கில் இத்தாலியை வீழ்த்தி வரலாற்றுச் சாதனையை இந்திய அணி பதிவு செய்தது. வீழ்த்தப்பட்ட இத்தாலி அணி இரு முறை ஃபிபா உலகக்கோப்பையை வென்ற அணி ஆகும். 

அபிஜித் சர்கார், ராகுல் பிரவின் ஆகியோரின் சிறப்பான கோல், இந்திய அணி ஆட்டத்தை வெல்வதற்கு துணைபுரிந்தது. முதல் பாதியை 1-0 என்ற கணக்கில் கையிலெடுத்த இந்திய அணி, இரண்டாம் பாதியிலும் ஒரு கோல் அடித்து வெற்றியை தன் வசமாக்கியது. கடந்த இரு ஆண்டுகளாக எடுத்த முயற்சியும், பயிற்சியுமே இந்த வெற்றிக்கு காரணமென இந்திய அணியினர் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close