Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தோனி ஒ.கே... ஆனாலும் ஸ்மித் தான் ஷார்ப்' : புனே உரிமையாளர் கோயங்கா!

இந்த ஐபிஎல் சீசனில் பிளேயர்கள், மைதானத்தில் மல்லுக்கட்ட, சர்ச்சை கருத்துகள் மூலமாக பரபரப்பை கிளப்பி வருகிறார்கள் புனே அணியின் உரிமையாளர்களான ஹர்ஷ் மற்றும் சஞ்சீவ் கோயங்கா. ஏற்கெனவே, ஸ்மித்தான் சிறந்த கேப்டன் என ஹர்ஷ் கோயங்கா சர்ச்சையை கிளப்பினார். 

Dhoni, Smith


பின், புனே அணி பேட்ஸ்மென்களில், சராசரியை பதிவிட்டு, தோனியை மறைமுகமாக தாக்கினார். இதையடுத்து, தோனி மனைவி சாக்ஷி மற்றும் தோனியின் ரசிகர்கள் ஹர்ஷ் கோயங்காவை திட்டியும், கலாய்த்தும் வந்தனர். இதையடுத்து, கடந்த மாதம் ஹைதராபாத் அணியுடன் நடந்த லீக் போட்டியில், தனது பாணியில் ஃபினிஷ் செய்து வெற்றி பெற வைத்தார். 


இந்நிலையில், தோனியின் அதிரடியால் மும்பையை வீழ்த்தி, புனே அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள போதும், கோயங்கா சகோதரர்கள் சர்ச்சை கருத்துகளை விடுவதாய் இல்லை.

Saniv Goenka


இதுகுறித்து சஞ்சீவ் கோயங்கா கூறுகையில், "கடந்த சீசனில் தோல்விகளால் துவண்டு போன நிலையில், இந்த சீசனில் அணியின் செயல்பாடு திருப்தி அளிக்கிறது. இந்த சீசனில், அணியில் நிறைய இளைஞர்கள், திறமையான வீரர்கள் இடம் வெற்றி பெற்றுள்ளனர். பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், 8 முதல் 9 லீக் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

அது அவ்வளவு எளிதானதல்ல. ஸ்மித், அணியை சிறப்பாக கையாண்டுள்ளார்.  நான் பழகியவர்களில், தோனி சிறந்த புத்திக் கூர்மையை உடையர். உலகின் சிறந்த விக்கெட் கீப்பர். ஆனால், தோனியைவிட ஸ்மித் சற்று முன்னால் உள்ளார். தோனியை விட, ஸ்மித் ஷார்ப்பானவர்" என்று கூறியுள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close