Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இத்தாலி ஓபன் டென்னிஸ் - அரையிறுதியில் சானியா ஜோடி தோல்வி!

இத்தாலி ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவின் அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிர்ஸா, கஜகஸ்தானின் ஷிவ்டோவா ஜோடி தோல்வி அடைந்தது. 

சானியா மிர்ஸா

இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறும் இத்தாலி சர்வதேச ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் சானியா மிர்ஸா - ஷிவ்டோவா ஜோடி, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா சீன தைபேவின் யங்-ஜன் சான் ஜோடியை எதிர்கொண்டது. அந்த ஆட்டத்தில் முதல் செட்டை 3-6 என இழந்த சானியா ஜோடி, டை பிரேக்கர் வரை சென்ற 2-வது செட்டை 7-6 எனக் கோட்டைவிட்டது. ஒரு மணி 44 நிமிடங்கள் நேரம் நீடித்த இந்தப் போட்டியில் சானியா ஜோடி 3-6, 6-7 என்ற நேர் செட் கணக்கில் தோற்று வெளியேறியது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close