Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#FrenchOpen: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் வாவ்ரிங்கா!

பிரெஞ்சு ஓப்பன் போட்டியில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் ஸ்டான் வாவ்ரிங்கா.

வாவ்ரிங்கா

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஃப்ரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டி பாரீஸில் நடைபெற்றுவருகிறது. இதில் நடால், ஜோக்கோவிச், ஆண்டி முர்ரே, வீனஸ் வில்லியம்ஸ் உள்ளிட்ட பிரபல வீரர்கள் பங்கேற்றனர். முதல் கட்ட ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், தற்போது அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் முன்னணி வீரர் ஆண்டி முர்ரேவை சந்தித்தார் ஸ்டான் வாவ்ரிங்கா.

பாரீஸில் நடந்த இந்த போட்டியில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரேவை 6-7 (6), 6-3, 5-7, 7-6 (3), 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஸ்டான் வாவ்ரிங்கா. இதையடுத்து மற்றொரு அரையிறுதி போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் 9 முறை சாம்பியன் பட்டம் வென்ற ரஃபேல் நடாலும் ஆஸ்த்ரியாவைச் சேர்ந்த டோமினிக் தைம்மும் மோதுகின்றனர். இதில் வெற்றி பெறுபவரோடு இறுதி ஆட்டத்தில் மோதுகிறார் வாவ்ரிங்கா.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close