Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பயிற்சியாளர் கும்ப்ளேதான்... அதிகாரபூர்வ அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ள அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம், சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் பி.சி.சி.ஐ இறங்கியது. இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பணிக்கு அதிரடிவீரர் சேவாக் உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

Kumble
 

இதனிடையே கும்ப்ளேவுக்கும், கேப்டன் கோலிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, பயிற்சியாளராக கும்ப்ளே தொடர கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு விருப்பமில்லை என்று கூறப்பட்டது. இதனால், இந்திய அணிக்கு விரைவில் பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில்,'மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர் வரை கும்ப்ளே இந்திய அணி பயிற்சியாளராக தொடர்வார்', என்று பி.சி.சி.ஐ நிர்வாகக் குழுவின் தலைவர் வினோத் ராய் கூறியுள்ளார்.

இந்திய அணி இந்த மாத இறுதியில் மேற்கு இந்திய தீவுகளுக்குச் செல்கிறது. வருகின்ற 23 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 9 ஆம் தேதி வரை இந்தத் தொடர் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close