Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாம்பியன்ஸ் டிராபி: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்

pakistan

சாம்பியன்ஸ் டிராபியின் முதல் அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான். சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதின. கார்டிப், சோபியா கார்டன் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான், பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து, களமிறங்கியது இங்கிலாந்து. அதிகபட்சமாக இங்கிலாந்து தரப்பில் ரூட் 46 ரன்கள், பேர்ஸ்டோ 43 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஐந்து வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆவுட் ஆனார்கள்.

இறுதியாக 49.5 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜுனைத் கான், ரயீஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்பின்னர் 212 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் நிதானமான ஆட்டத்தை விளையாடியது. தொடக்க வீரர்களான அசர் அலி 76 ரன்களும், ஃபகர் ஜமான் 57 ரன்களும் குவித்தனர். வலுவான இந்தத் தொடக்கத்தால் பாகிஸ்தான் சிறப்பான வெற்றியை நோக்கி முன்னேறியது. 

37.1 ஓவர்களின் முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது பாகிஸ்தான். இதன்மூலம் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது அந்த அணி. நாளை நடைபெற இருக்கும் இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் இறுதியில் மோத இருக்கிறது பாகிஸ்தான்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close