Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் சுரேஷ் ரெய்னா!

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் இரண்டாவது சீசனில் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சுரேஷ் ரெய்னா, மாநில அளவில் நடக்கும் பிரீமியர் லீக் போட்டியில் விளையாடுவது, அதன் வீச்சை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

சுரேஷ் ரெய்னா

ஏற்கெனவே, சர்வதேச அளவில் பிரபலமான சஞ்சு சாம்சன், சந்தீப் ஷர்மா, அஷோக் டிண்டா, உன்முக்த் சந்த், மனோஜ் திவாரி, மணன் வோரா போன்றவர்கள் கிரிக்கெட் நட்சத்திரங்கள். தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சுரேஷ் ரெய்னாவும் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஆண்டு பிரீமியர் லீக், வரும் ஜூலை மாதம் தொடங்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் கடந்த ஆண்டு துவக்கப்பட்ட தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. முதல் சீசனில் 8 அணிகள் பங்கேற்ற பிரீமியர் லீக்கில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close