Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடுத்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை இல்லை...!

டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் டி-20 கோப்பை நடந்து வருகிறது. இதுவரை நடந்த டி-20 உலகக்கோப்பைப் போட்டிகளில், மேற்கு இந்தியத் தீவுகள் அணி இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

T-20 world cup

அதேபோல், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. கடைசியாக கடந்த ஆண்டு, இந்தியாவில் டி-20 உலகக்கோப்பை நடந்தது. அதில், மேற்கு இந்தியத் தீவுகள் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, அடுத்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.


இந்நிலையில், தற்போது அடுத்த ஆண்டு நடைபெறவிருந்த டி-20 உலகக்கோப்பைத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நிறைய தொடர்களில், அணிகள் ஒப்பந்தமாகியுள்ளன. இதனால், வருகின்ற 2020 ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. தென் ஆப்ரிக்கா அல்லது ஆஸ்திரேலிய நாட்டில், அடுத்த டி-20 கோப்பை நடப்பதற்கான வாய்ப்புள்ளது. வருகின்ற 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரும், 2021 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி தொடரும் நடக்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close