Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இந்திய பயிற்சியாளர் பதவிக்கு வரும் எண்ணம் இல்லை!'- ஜெயவர்தனே

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பு வகிக்க வாய்ப்பு வந்தாலும் தற்போது அதைச் செய்யும் எண்ணம் இல்லை என்று இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயவர்தனே.

ஜெயவர்தனே

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். ஆனால் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக அவர் தீடிரென்று தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பி.சி.சி.ஐ அறிவித்தது.

இந்நிலையில், இந்திய அணிக்கு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேலா ஜெயவர்தனே நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "பயிற்சியாளர் பதவியில் எனது பெயர் அடிபடுவதாகக் கூறப்படுவதை கேட்டு மிகவும் உற்சாகமடைந்தேன். ஆனால், முழுநேரப் பொறுப்புகளை வகிக்க இப்போது எனக்கு விருப்பமில்லை. லீக் போட்டிகளில் பயிற்சியளிக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குல்னா டைட்டனஸ் ஆகிய அணிகளின் மீதுதான் என் கவனம் உள்ளது" என்று பதிவிட்டுள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு டாம் மூடி, ஷேவாக், லால்சந்த் ராஜ்புத் உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close