Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#WomensWorldCup- இந்தியா இரண்டாவது வெற்றி... மந்தனா சதம்!

பெண்கள் உலகக் கோப்பைப் போட்டியின் 7-வது கிரிக்கெட் போட்டி, இன்று மேற்கிந்தியத்தீவுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்திய கிரிக்கெட் பெண்கள் அணி

இந்தப் போட்டிக்கான டாஸை வென்ற இந்தியா, பௌலிங் செய்யத் தீர்மானித்தது. இதையடுத்து, மேற்கிந்தியத்தீவுகள் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. அந்த அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ஹேலி மேத்யூஸ், அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். வேறு யாரும் அதிக ரன்கள் அடிக்காததால், அந்த அணியால் 200 ரன்களைக்கூடத் தொட இயலவில்லை. இந்தியா சார்பில் தீப்தி ஷர்மா, பூனம் யாதவ் மற்றும் ஹர்மன்ப்ரீத் கௌர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளில் ஒருவரான பூனம் ராவத் டக்-அவுட்டாக, இந்திய பெவிலியன் சற்று அதிர்ச்சியில் உறைந்தது. ஆனால், இன்னொரு தொடக்க வீராங்கனையான ஸ்மிரிதி மந்தானா, கடைசி வரை அவுட்டாகாமல் 106 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். 42.3 ஓவர்களில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 183 ரன்களை மூன்று விக்கெட்டுகள் இழந்த நிலையில் கடந்தது இந்தியா. இது, இந்திய அணி தொடர்ந்து பெறும் இரண்டாவது வெற்றியாகும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close