Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா பேட்டிங்

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இன்று தொடங்கிய முதல் டெஸ்ட்டில், இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்  செய்யத் தீர்மானித்தது.

இந்தியா- இலங்கை டெஸ்ட்

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கு, இந்தியத் தரப்பில் இளம் அணி களம் இறக்கப்பட்டுள்ளது. இன்று விளையாடும் முதல் டெஸ்ட்டில், இந்தியா சார்பில் அபினவ் முகுந்த், தவான், புஜாரா, கோலி, ரஹானே, ஹர்திக் பாண்டியா, அஷ்வின், சாகா, ஜடேஜா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ளனர். இலங்கை அணி, சமீப காலமாக தொடர் தோல்விகளைச் சந்தித்ததை அடுத்து, அந்த அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து, ரங்கனா ஹெராத் இலங்கை டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பலம் பொருந்திய இந்திய அணியை சொந்த மண்ணில் இலங்கை எதிர்கொள்வதால், ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்னர், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கி, 9 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 38 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடிவருகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close