Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இலங்கைக்கு 550 ரன்கள் டார்கெட்... விறுவிறுப்பில் காலே டெஸ்ட்.. வெற்றி பெறுமா இந்தியா?

காலேயில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 550 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 2 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்கள் எடுத்துள்ளது இலங்கை அணி.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 600 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. தொடக்க வீரர் தவான் 190 ரன்னும், புஜாரா 153 ரன்னும் எடுத்தனர். ரஹானே 57 ரன்னும் பாண்டியா 50 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். இலங்கை சுழல் பந்துவீச்சாளர் பிரதீப் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை இலங்கை அணி தொடங்கியது. அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் சுழல் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் அடுத்தது ஆட்டம் இழந்தனர். இதனால் இலங்கை அணி 291 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பெரைரா 92 ரன்னும் மேத்யூஸ் 83 ரன்னும் தரங்கா 64 ரன்னும் எடுத்தனர்.

இந்திய வீரர்கள் ஜடேஜா 3 விக்கெட்டும் சமி 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இலங்கை பாலோ ஆன் ஆனாலும் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த தவான் இரண்டாவது இன்னிங்ஸில் 14 ரன்னில் ஆட்டம் இழந்தார். முகுந்த் அபாரமாக விளையாடி 81 ரன்னும் கேப்டன் கோலி 103 ரன்னும் எடுத்தனர். 3 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய அணி டிக்ளேர் செய்தது.

இதைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு 550 ரன்கள் டார்கெட்டாக இந்திய அணி நிர்ணயித்தது. தொடக்க வீரர் தரங்கா 10 ரன்னிலும் குணத்திலக 2 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். தற்போது இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்கள் எடுத்துள்ளது. சமி, யாதவ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 4வது நாளான இன்று இந்திய பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தினாலே இந்தியா வெற்றி பெற முடியும். போட்டியை டிரா செய்யும் முனைப்பில் இலங்கை வீரர்கள் விளையாடுவார்கள். இன்னும் ஒருநாள் இருக்கும் நிலையில் போட்டியில் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close