Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொழும்பு டெஸ்ட்.. எலைட் கிளப்பில் இணைந்த அஷ்வின்!

ashwin

கொழும்பு டெஸ்டில் அரைசதமடித்த இந்திய வீரர் அஷ்வின் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 2,000 ரன்களைக் கடந்தார். 51-வது போட்டியில் இந்த மைல்கல்லை எட்டிய அஷ்வின், டெஸ்ட் போட்டிகளில் 2,000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகள் சாய்த்த ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் இணைந்தார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 2,000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் இயான் போத்தம், பாகிஸ்தானின் இம்ரான் கான் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் ஆகியோருக்கு அடுத்தபடியாக 4-வது இடத்தை அஷ்வின் பிடித்தார். இயான் போத்தம் 42 டெஸ்ட் போட்டிகளிலும், இம்ரான் கான் மற்றும் கபில்தேவ் ஆகியோர் 50 டெஸ்ட் போட்டிகளிலும் இந்த மைல்கல்லை எட்டினர். கொழும்பு டெஸ்டில் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஷ்வின், ஆட்டமிழந்து வெளியேறினார். 

- தினேஷ் ராமையா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close