Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர்: யுவராஜ் சிங்குக்கு அணியில் இடமில்லை!

இந்திய அணி தற்போது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெரும் சூழ்நிலையில் இந்தியா விளையாடி வருகிறது. 

இந்திய அணி


அதேபோல இலங்கை அணியுடன் ஐந்து ஒரு நாள் மற்றும் ஒரு டி-20 போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணியினை பி.சி.சி.ஐ நேற்று அறிவித்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக களமிறக்கப்பட்ட யுவராஜ்க்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், தினேஷ் கார்த்தி, ரிஷப் பண்ட், அஷ்வின், ஜடேஜா, ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோருக்கும் அணியில் இடம் இல்லை. அதே நேரத்தில் ரோஹித் ஷர்மா, ராகுல், மணிஷ் பாண்டே, அக்‌ஷர் படேல், சஹால், பும்ரா மற்றும் தாகூர் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

அணியின் விவரம் வருமாறு, தவான், ரோஹித் ஷர்மா, ராகுல், கோலி (கேப்டன்), ரஹானே, மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தோனி (விக்கெட் கீப்பர்), பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல், சஹால், குல்தீப் யாதவ், பும்ரா, தாகூர், புவனேஷ்வர் குமார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close