Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடம்!

ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் சர்வதேச பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி தன்னுடைய முதலிடத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டுள்ளார்.

விராட் கோலி

இந்திய கிரிக்கெட்டின் புதிய மந்திரம் கோலி. டெஸ்ட்  தொடர்களில் தொடர் வெற்றிகளைக் குவித்துவரும் கோலி சர்வதேசப் போட்டிகளில் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார். சர்வதேச அளவிலான பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 873 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.

இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், 861 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இதேபோல், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் புவனேஸ்குமார் 13-வது இடத்தில் உள்ளார். சர்வதேச அளவில் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஹசில்வுட் முதலிடத்தில் உள்ளார். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் பத்து இடங்களில் ஓர் இந்தியர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேபோல், அணிகளுக்கான தரவரிசையில் 119 புள்ளிகளுடன் தென்னாப்ரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 117 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், 114 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close