Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலக மல்யுத்தம்: பதக்கக் கனவுடன் களமிறங்கும் இந்திய அணி!

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் இன்று கோலாகலமாகத் தொடங்க உள்ளது.

சாக்‌ஷி மாலிக்

உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டி, இன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வெகு விமரிசையாகத் தொடங்க உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு, ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், மல்யுத்தப்  போட்டியின் 58 கிலோ பெண்களுக்கான பிரிவில்  போட்டியிட்டு, இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கத்தை வென்று கொடுத்த சாக்‌ஷி மாலிக், இந்தத் தொடரில் இந்திய நம்பிக்கை நட்சத்திரமாகக் களமிறங்குகிறார்.

ஃப்ரீ-ஸ்டைல், கிரேக்கோ ரோமன் பிரிவு எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடக்கும் இந்த சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் 23 வீரர், வீராங்கனைகள் உள்ளனர். மகளிர் 58 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்கும் ஷாக்‌ஷி மாலிக், 48 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கும் வினேஷ் போகத், ஆடவர் 65 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்கும் பஜ்ரங் ஆகியோர், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர். திருமணத்துக்குப் பின்னர், சாக்‌ஷி மாலிக் பங்கேற்கும் முதல் சர்வதேசப் போட்டி என்பதால், சாக்‌ஷி மீது எதிர்பார்ப்புகள் கூடுதலாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close