Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இறைவனடி சேர அனுமதியுங்கள்: பிரதமர் மோடிக்கு முருகன் கடிதம்...

தான் ஜீவ சமாதி அடைவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று சிறையில் இருக்கும் முருகன் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். 


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 26 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் முருகன் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், 'நான் கிருஷ்ணரின் தீவிர பக்தன். கிருஷ்ணரிடம் சரணாகதியடைய கடந்த ஆறு ஆண்டுகளாகத் தீவிர ஆன்மிகப் பயிற்சி செய்துவருகிறேன். ஒரு பொய்க் குற்றச்சாட்டால் கடந்த 26 வருடங்களாகக் கொடிய சிறை தண்டனை அனுபவித்து வருகிறேன். ஒருவேளை என் மீதான குற்றச்சாட்டை உண்மை எனக் கொண்டால்கூட அதற்கான சிறைத்தண்டனைக் காலத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்பே கழித்துவிட்டேன்.

இந்த உடலைவிட்டு இந்த உயிர் பிரிந்திருக்க வேண்டும். ஆயினும் அவற்றையும் கடந்து இச்சிறை வாழ்வு ஒரு கொடிய வதைப் படலமாகத் தொடர்கிறது. அதனால், இறைவனிடம் முழுமையாகச் சரணடைந்து சங்கமமாகிவிடத் தீர்மானமாக முடிவு செய்துள்ளேன். இந்தியாவிலுள்ள இந்து மதத் துறவிகள், தீவிர இறை பக்தர்கள், ஆன்மிகவாதிகள் இறைவனைச் சரணடைந்து சங்கமமாகி ஜீவ சமாதி நிலை அடையும் மரபு காலம் காலமாக இருந்துவருகிறது. கடந்த வருடம்கூட ராஜஸ்தானில் ஒரு ஜெயின் மதத் துறவி ஜீவ சமாதி அடைய உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது.

தமிழர் மதத்தில் 'வடக்கு இருத்தல்' என்ற பெயரில் இந்து ஜீவ சமாதிநிலை அடையும் மரபு பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவருகிறது. கடந்த 4.7.2017 ஏகாதசி நாளன்று கண்காணிப்பாளர் அவர்களுக்கு வேண்டுதல் மனு சமர்ப்பித்து அன்றுமுதல் ஒரு வேளை உணவுடன் எனது விரதத்தையும் தியானத்தையும் ஆரம்பித்தேன். கடந்த 19.7.2017 இரண்டாம் ஏகாதசி நாள் முதல் 18.8.2017 அன்று முதல் நான்காம் ஏகாதசி நாள் வரை வெறும் பழங்கள் மட்டும் உண்டு எனது ஜீவ சமாதி அடைவதற்கான விரதத்தைத் தொடர்ந்தேன்.

இதுதொடர்பாக 19.7.2017-ம் தேதி சிறைத்துறை தலைவர் அவர்களுக்கும் 18.8.2017-ம் தேதி தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் வேண்டுதல் விடுத்துள்ளேன். எனது முடிவு மத்திய அரசின் கையில் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. 18.8.2017-ம் தேதி முதல் அனைத்து உணவினையும் நிறுத்தி கிருஷ்ணரின் பாதங்களைப் பற்றிக்கொள்ளும் ஜீவ சமாதி அடைவதற்கான பயணத்தை நோக்கிப் போகிறேன். எனது இந்த உறுதியான பயணத்துக்கு யாரும் எவ்வித இடையூறும் செய்திடாதபடிக்குத் தகுந்த அனுமதியும் ஆணையும் அல்லது பரிந்துரையும் வழங்கி உதவிடுமாறு மிகவும் தயவுடன் வேண்டுகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close