Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும்!' - முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், 18-ம் நூற்றாண்டில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க போரை மையமாகக்கொண்டு,  'குளச்சல் போர்' என்கிற ஆய்வுப் புத்தகம் வெளியிடப்பட்டது. அதை, முன்னாள் ஐ.ஏ.எஸ்அதிகாரி தேவசகாயம் வெளியிட்டார். மொழிபெயர்ப்பாளர் குளச்சல் மு.யூசுப் பெற்றுக்கொண்டார்.

அப்போது தேவசகாயம்  ஐ.ஏ.எஸ் பேசும்போது,  'நாட்டில் இப்போது இரண்டாவது குளச்சல் போர் நடந்துகொண்டிருக்கிறது. இந்தப் போரை வைத்து உத்தரப்பிரதேசத்தில் வெற்றிபெற்றுவிட்டார்கள். உண்மையான ராணுவ வீரர்கள் போரைப் பற்றி பேசமாட்டார்கள்

குமரி மாவட்டத்திலும் போர் தொடங்கிவிட்டது. அது, இப்போது குளச்சல் துறைமுகம் என்கிற பெயரில் போர்  நடக்கிறது. இந்த ஜனநாயக நாட்டில் மக்கள் தான் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்துத்தார்கள். ஆனால், அவர்களுக்கு மக்களைப் பற்றி கொஞ்சம்கூட கவலை இல்லை.மக்களுக்கு எதிராக அரசு இயங்குகிறது.

குமரி மாவட்டத்தில் இனயம் பகுதியில் அமைக்கப்படும் துறைமுகத்தை மக்கள் எதிர்க்கிறார்கள். அதுவும் மாவட்டம் முழுவதும் மக்கள் ஒற்றுமையாக இருந்து துறைமுகத்தை  எதிர்கிறார்கள். மக்களையும் மண்ணையும் ஒழித்துவிட்டு,  துறைமுகம் கொண்டுவருவதால், யாருக்குப் பயன்படும். குமரியில் நால்வழிச் சாலையைக் கொண்டு வருகிறார்கள். அதையும் இயற்கையை அழித்துதான் கொண்டுவருகிறார்கள். இதுவரை, 117 குளங்களும் ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்வெளிகளும் இதற்காக அழிக்கப்பட்டுள்ளன. மக்கள் ஒன்றுசேர்ந்தால், ஜனநாயகம் ஜெயிக்கும்.துறைமுகத்தைக் கொண்டு வருவதன்மூலம் மாவட்டத்தை அழிக்க முயற்சி நடக்கிறது. துறைமுகம்,ஆறுவழிச் சாலை,விமானநிலையம் எல்லாவற்றையும் குமரி மாவட்டத்தில் கொண்டுவந்தால், இங்குள்ள மக்கள் எங்கே போய் வாழ்வது. போராட்டத்தை அடக்க இன்னும் இங்கு துப்பாக்கிச் சூடுதான் நடக்கவில்லை.ஒன்று சேர்ந்து போராட வேண்டும். இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும்' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close