Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜி.எஸ்.டி.யால் ஒன்பது மாநிலங்களின் வருவாய் பாதிப்பு!

ஜிஎஸ்டி வரி அமல்படுத்தியதால் இந்த வருடம் ஒன்பது மாநிலங்களுக்கு ரூ.9500 கோடி அளவில் இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி மசோதா அமல்படுத்தப்பட்டதிலிருந்து அதன் சாதக பாதகங்களை பல தரப்பினரும் அலசி வருகின்றனர். இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதைச் சில ஆண்டுகள் கழித்துதான் புரிந்துகொள்ள முடியும் என்றே பெரும்பாலான வல்லுநர்கள் தெரிவித்துவருகிறார்கள். 

ஜிஎஸ்டி

இந்த நிலையில், இந்தியா ரேட்டிங்ஸ் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''ஒன்பது மாநிலங்கள் ஜிஎஸ்டி வரி மசோதாவினால் வருவாய் பாதிப்புக்குள்ளாகும்'' என்று கூறியுள்ளது. மேலும், "ஜிஎஸ்டி வரி மசோதாவில் இந்த நிதியாண்டில் அனைத்து மாநிலங்களின் மொத்த வரி வருவாய் 16.6 சதவிகிதம் வளர்ச்சியடையும். ஆனால், மாநிலங்கள் வாரியாகப் பார்க்கும்போது ஒன்பது மாநிலங்கள் ரூ.9500 கோடி வருவாயை இழக்கும் நிலை உருவாகவிருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அவை ஆந்திரா, சட்டிஸ்கர், குஜராத், ஹிமாச்சல், மத்தியப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், தமிழ்நாடு, கோவா, ஜம்மு- காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close