Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீட் தேர்வு அடிப்படையில் எம்.பி.பி.எஸ். தர வரிசைப் பட்டியல் வெளியீடு!

நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. 


நீட் தேர்வு அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 4-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மருத்துவக் கலந்தாய்வுக்கான பணிகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக, மருத்துவக் கலந்தாய்வுக்கான ரேங்க் பட்டியல் சென்னையில் வெளியிடப்பட்டது. 

பட்டியலை வெளியிட்டுப் பேசிய சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ’சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் நடக்க இருக்கிறது. செப்டம்பர் 4-ம் தேதிக்குள் மருத்துவக் கலந்தாய்வை நடத்தி முடிக்கவேண்டிய கட்டாயம் இருப்பதால், விடுமுறை தினங்கள் இல்லாமல் தொடர்ச்சியாக கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி விழா இருந்தாலும், கலந்தாய்வு நடைபெறும். நாளை முதல் கலந்தாய்வு தொடங்க இருப்பதால், மாணவர்களுக்கு தொலைபேசி வாயிலாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் தகவல் தெரிவிக்கப்படும்’ என்று கூறினார். எம்.பி.பி.எஸ். தர வரிசைப் பட்டியலில் ஓசூரைச் சேர்ந்த சி.பி.எஸ்.இ. மாணவர் சந்தோஷ்  முதலிடமும் கோவையைச் சேர்ந்த தமிழக அரசுப் பாடத் திட்டத்தில் படித்த முகேஷ் கண்ணா மற்றும் சையது ஹபீஸ் ஆகியோர் முறையே இரண்டு, மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளனர். தமிழகத்தில் வழக்கமாக ஜூன் 3-வது வாரத்தில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு, நீட் தேர்வு விவகாரத்தால் ஆகஸ்ட் இறுதியில் தொடங்க இருக்கிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close