Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு தேவை'- ஆளுநருக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கடிதம்!

அ.தி.மு.க-வில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் இன்று தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், 'தமிழக சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்று கூறி ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். 

காங்கிரஸ்

காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய பின் காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் ராமசாமி, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 'தமிழக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஊழல் அரசு என்று குறை கூறிய பின்னர் பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு கொடுத்தது எதனால். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும்' என்று  தெரிவித்தார். 

நேற்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ-க்களும் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் மூலம் தெரிவித்தனர். இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டுமென்று ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார். இந்நிலையில், இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close