Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்: படகு போக்குவரத்து ரத்து

கடந்த ஐந்து நாள்களாக சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் சீற்றம் அதிகமாகக் காணப்படுகிறது. மூன்று கடலிலும் கடல் அலைகள் ஆக்ரோஷமாக அடித்து வருகிறது. இன்று காலை முதல் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடலில் கன்னியாகுமரியில் கடல் அலை 10 முதல் 15 அடி வரை உயர்ந்து  ஆக்ரோஷமாக எழுந்தன. அதே சமயம் வங்க கடலில் கடல் நீர் மட்டம் தாழ்ந்து கடல் பாறைகளும் பாசிகளும் வெளியே தெரிந்தன. காலை 8 மணி முதல் தொடங்கும் படகு போக்குவரத்து கடல் நீர்மட்டம் காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு இன்று படகு போக்குவரத்து இயக்கப்படவில்லை.

இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர். அதுபோல் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை விதிக்கப்பட்டது. அதனால் பக்தர்களும் பயணிகளும் விரக்தியடைத்தனர். கடற்கரையில் போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். குறைவான அளவு மீனவர்கள் மட்டும் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். விவேகானந்தர் மண்டபத்துக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இயக்கப்பட்டு வந்த படகுகளில் ஒன்றான விவேகானந்தா படகு பராமரிப்பு பணிகள் முடிந்து வெள்ளோட்டம் இன்று இரண்டாவது நாளாகப் பார்க்கப்பட்டது. கடல் சீற்றம் தனிந்ததும் பொதிகை, விவேகானந்தா, குகன் ஆகிய படகுகள் விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்கப்படுமாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close