Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குமரியில் கடலோரப் பாதுகாப்புப் படையினர் நடத்திய சஜாக் ஆபரேஷன்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கடல் வழியாகத் தீவிரவாதிகள் மும்பைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினார்கள். அதன்பின் கடலோரப் பாதுகாப்புப் படையினர் இந்திய கடல் பகுதிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் இன்று நாடு முழுவதும் சஜாக் ஆபரேஷன் என்ற பெயரில் கடல் பகுதிகளை அதிநவீனப் படகுகள் மூலம் கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது. இந்தியாவின் தென் முனையாக கன்னியாகுமரி மாவட்டம் இருக்கிறது. கடல் சார்ந்த சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கவும் ஆயுதங்கள் மற்றும் போதப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்கவும் சஜாக் ஆப்ரேஷன் கடலோரப் பாதுகாப்பு படையால் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று கன்னியாகுமரியில் சஜாக் ஆபரேஷன் நடந்தது. சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் போலீஸார் அதிநவீன ரோந்து படகில் சஜாக் ஆபரேஷனை நடத்தினார்கள். அவர்கள் கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் கூடங்குளம் வரையிலான பகுதி வரை கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களிடமும் அடையாள அட்டை சோதனையை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகப்படும்படியாக எதாவது படகுகள் தென்பட்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளனர். இதுபோல் கடலோர சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மணலில் ஓடும் அதிநவீன ரோந்து வாகனங்கள் மூலமும் கடலோர பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதனால், குமரி மாவட்டத்தின் மீனவக் கிராமங்களும் பதற்றமாக உள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close