Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மஹாபுஷ்கரமா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வருமா? கேள்வி எழுப்பும் ராமானந்தா மகராஜி

நாகை மாவட்டம், மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் செப்டம்பர் 12-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 12 நாள்கள் காவிரி மஹாபுஷ்கரவிழா கொண்டாடப்பட உள்ளது.  இதில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மஹாபுஷ்கரம் வருவது சரியென்றும், சரியில்லை என்றும் கேள்வி எழுந்திருக்கிறது.  

ராமானந்தா மகராஜி

இதுகுறித்து காவிரி மஹாபுஷ்கர விழா கமிட்டித் தலைவர் சுவாமி ராமானந்தா மகராஜிடம் கேட்டோம், ''நர்மதா நதியில் பிரதமர் மோடி தலைமையிலும், கோதாவரி நதியில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலும் மஹாபுஷ்கரம் நடத்தி இருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் கன்னி ராசிக்குரிய கிருஷ்ணா நதியில் இந்த விழாவை அரசு சார்பில் சிறப்பாகக் கொண்டாடினார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது புஷ்கரம் என்றும், 12 நதிகளுக்குரிய 12 ராசிகளும் ஒருசுற்று கடந்துவரும்போது, 144 ஆண்டுகள் ஆகிவிடும். அப்போது மஹாபுஷ்கரம் கொண்டாடப்படுகிறது என ஆந்திர அரசு அப்போது அறிவித்திருக்கிறது. 144 ஆண்டுக்கு ஒருமுறைதான் மஹாபுஷ்கரம் வரும் என்று எழுத்துபூர்வமான ஆதாரம் இல்லை. அதுபோல், செப்டம்பர் 2-ம் தேதிதானே குருபெயர்ச்சி வருகிறது. நீங்கள் எப்படி மஹாபுஷ்கரம் கொண்டாடுகிறீர்கள்? என்று கேட்கிறார்கள்.  

2-ம் தேதி குருபெயர்ச்சி நடந்தாலும், பஞ்சாங்க கணக்குபடி காவிரி புஷ்கர புண்ணியகாலம் 12-ம் தேதிதான் வருகிறது. எனவேதான் அந்தநாளில் கொண்டாடுகிறோம். கும்பகோணம் மகாமக குளத்தில் புனித தீர்த்த கிணறுகள் இருப்பதுபோல், நமது காவிரி துலாக்கட்டத்திலும் 9 புனித தீர்த்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது புனிதமாகக் கருதுகிறோம். புன்னிய நதிகள் எல்லாம் பாவம் போக்க காவிரியில் நீராடியதுக்கு ஆதாரமாக இந்தக் கிணறுகள் கிடைத்திருக்கின்றன. புனித பொக்கிஷங்களான இக்கிணறுகளைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. புஷ்கரப்பணிகள் காலதாமதமாக ஆரம்பிக்கப்பட்டபோதிலும் அரசு முனைப்புடன் செயல்படுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்ள அனைத்து மடாதிபதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. துறவியர் மாநாடும் நடக்கவிருக்கிறது. தமிழக முதல்வரும் கலந்துகொண்டு பெருமை சேர்க்க இருக்கிறார். எனவே, பக்தர்களும் தவறாது கலந்துகொண்டு இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்வில் எல்லா நலன்களும் பெற ஆசீர்வதிக்கிறேன்’’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close