Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நெல்லை அ.தி.மு.க யார் பக்கம்? நிர்வாகிகளை இழுக்க போட்டா போட்டி..! தொண்டர்கள் குழப்பம்!

நெல்லை அ.தி.மு.க-வைக் கைப்பற்ற நிர்வாகிகள் இடையே போட்டா போட்டி நிலவுவதால் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

அ.தி.மு.க-வில் எதிரும் புதிருமாகச் செயல்பட்ட ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்த நிலையில் டி.டி.வி தினகரன், தனி அணியாகச் செயல்பட்டு ஆட்சிக்கும் கட்சிக்கும் சவாலாக விளங்கி வருகிறார். அவரது கட்டுப்பாட்டில் 19 எம்.எல்.ஏ-க்கள் உள்ள நிலையில், கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயன்று வருகிறார். இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அவரது ஆதரவாளர்கள் மூலமாக அதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. 

அ.தி.மு.க குழப்பம்

நெல்லை மாநகர மாவட்ட அ.தி.மு.க செயலாளரான பாப்புலர் முத்தையா, டி.டி.வி தினகரன் ஆதரவாளர். அத்துடன், மாநிலங்களவை உறுப்பினரான விஜிலா சத்யானந்த் மற்றும் டி.டி.வி-யால் அண்மையில் அமைப்புச் செயலாளர் ஆக்கப்பட்ட ஆர்.பி.ஆதித்தன் ஆகியோர் தினகரன் அணியில் உள்ளனர். இவர்கள் தங்களது அணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை மாநகரில் மேலப்பாளையம் பகுதிச் செயலாளர் ஹயாத், நெல்லைப் பகுதிச் செயலாளர் மோகன் ஆகியோரின் உதவியுடன் கிளைக்கழக நிர்வாகிகளைத் தங்களுடைய அணிக்கு ஆதரவாகத் திரட்டும் முயற்சியில் மாநகர மாவட்டச் செயலாளரான பாப்புலர் முத்தையா ஈடுபட்டு வருகிறார். கட்சியின் அமைப்புச் செயலாளராக இருந்த சுதா.பரமசிவன், எடப்பாடி ஆதரவாளராக மாறிவிட்டதால் இன்று அவர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மானூர் ஒன்றியச் செயலாளரான கல்லூர் வேலாயுதம் அமைப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால், நெல்லை மாநகர அ.தி.மு.க-வை தினகரன் ஆதரவு அணியாக மாற்றும் முயற்சி தீவிரமாக நடக்கிறது.

சுதா பரமசிவன்

நெல்லைப் புறநகர் மாவட்ட அ.தி.மு.க-வைப் பொறுத்தவரையிலும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களின் பிடியில் இருக்கிறது. மாவட்டச் செயலாளரான கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி, புறநகர் பகுதியில் உள்ள கட்சியின் கிளை மற்றும் ஒன்றிய நிர்வாகிகளை எடப்பாடி அணிக்கு ஆதரவாக மாற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அமைச்சர் ராஜலட்சுமி, எம்.எல்.ஏ-க்களான செல்வமோகன் தாஸ், இன்பதுரை, முருகையா பாண்டியன், மனோகரன் உள்ளிட்டோரும் கட்சியின் ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகளைத் தங்கள் அணிக்கு இழுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். கட்சி நிர்வாகிகளின் இந்த நடவடிக்கையால் தொண்டர்களிடம் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

கட்சி நிர்வாகிகள் தங்களுடைய பதவியைத் தக்க வைக்கவும் கட்சியைத் தங்கள் அணியினருக்குச் சாதகமாகப் பலமாக மாற்றவும் பேரங்களை நடத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களால் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close