Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"எங்களைப் பார்த்துப் பயப்படுகிறார் தினகரன்" அதிரடி காட்டிய வைத்திலிங்கம்

ரியலூரில் எம்.ஜி.ஆர்  நூற்றாண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்த பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம்," நாங்கள் யார் அச்சுறுத்தலுக்கும் அஞ்சப்போவதில்லை. கண்டிப்பாக நான்கு வருட ஆட்சியை நிறைவு செய்வோம். சசிகலாவின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

இழந்த இரட்டை இலைச் சின்னத்தையும், கட்சியையும் மிகவிரைவில் மீட்போம். தினகரன் நேற்று என்னை கட்சியிலிருந்து நீக்குகிறார். இன்று பல நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார். அவர் அதிகாரம் இல்லாமல், என்ன செய்வது என்று தெரியாமல் செய்துகொண்டிருக்கிறார். 90 சதவித பொதுக்குழு உறுப்பினர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். தினகரன், திவாகரன் வசம் 40 எம்.எல்.ஏ க்கள் ஆதரவு இருப்பதாகச் சொல்கிறார்கள். அதைவிட ஒருபடி மேலே போய் நாஞ்சில் சம்பத், 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு எங்களிடம் இருப்பதாக மாற்றி மாற்றி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இதில் யார் சொல்வது உண்மை என்று மிகவிரைவில் தெரியவரும்.

                             

அதுமட்டுமல்லாமல் பாண்டிசேரியில் 19 எம்.எல்.ஏ-க்களை அடைத்து வைத்திருக்கிறர்கள். அவர்களை வெளியில் விட்டால் எங்கள் பக்கம் வந்துவிடுவார்கள் என்று பயந்துகொண்டு வலுகட்டாயமாக அடைத்து வைத்திருக்கிறார்கள். அங்குள்ள எம்.எல்.ஏ-க்களிடமும் பேசிகொண்டிருக்கிறோம். விரைவில் கட்சியையும், சின்னத்தையும் மீட்டு அம்மாவின் ஆட்சியை மிகச்சிறப்பாக செயல்படுத்துவோம்" என்று முடித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close