Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மருத்துவக் கலந்தாய்வு - மாணவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

ருத்துவக் கலந்தாய்வு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் நாளை  நடைபெற இருக்கிறது. இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ள இருக்கும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களை தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டிருக்கிறது. 

மருத்துவக் கலந்தாய்வு

மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள் கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தை www.tnhealth.org / www.tnmedicalselection.org என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். மேலும், மாணவர்களுக்கு எந்த நேரத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்வது என்ற விவரத்தை தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள கலந்தாய்வுக்கான கால அட்டவணையைப் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். 

கலந்தாய்வில் கலந்துகொள்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே கலந்தாய்வு கூடத்துக்கு வர வேண்டும். கலந்தாய்வில் கலந்துகொள்ளும்போது "’Secretary, Selection Committee, Chennai - 10" என்ற பெயரில் எடுக்கப்பட்ட வரைவோலை கொடுக்க வேண்டும். 

கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள் தங்களுடைய அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்துவர வேண்டும். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 31,000-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். முதல்கட்ட கலந்தாய்வில் நீட் தேர்வில் 170 மதிப்பெண் வரை பெற்ற தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொதுப்பிரிவு மாணவர்களை அழைத்து இருக்கிறார்கள். ஒரு வேளை முதல் இரண்டு நாள்களிலேயே அனைத்து இடங்களையும் நிரம்பிவிட்டால் அடுத்தடுத்த நாள்களில் கலந்தாய்வு நடக்காமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. 

ஏற்கெனவே, அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைத்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்கள் இந்தக் கலந்தாய்வில் கலந்துகொண்டு இடம்பெற முடியாது. பொறியியல் படிப்பு அல்லது இதர படிப்பில் சேர்ந்த மாணவர்கள், தாங்கள் சேர்ந்துள்ள கல்லூரியில் Bonafide certificate -யை வாங்கி வர வேண்டும். 

முதல்கட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ளாதவர்களுக்கு, இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. முதல் கட்ட கலந்தாய்வுக்குப் பின்பு மருத்துவ சேர்க்கைக்கான இடங்கள் காலியிடமாக இருந்தாலும், முதல் கட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ளவில்லை என்றால் அதன்பின்பு சேர்க்கையில் இடம் இருந்தாலும், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியாது. 

கலந்தாய்வில் கலந்துகொள்ள ரூ.500 ரூபாய்க்கு வரைவோலையும், மருத்துவக் கல்லூரி இடத்தைத் தேர்ந்தெடுத்த பின்பு கல்வி கட்டணத்துக்கான வரைவோலையும் வழங்க வேண்டும். 

அரசு கல்லூரியில் பொதுப் பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்த மாணவருக்கு எம்பிபிஎஸ் சேர ஒதுக்கீடு பெற்றால் கல்வி கட்டணமாக 13,600 ரூபாயும், அரசு பல்மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தால் 11,600 ரூபாயும், மற்ற பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் எம்பிபிஎஸ் சேர ஒதுக்கீடு பெற்றாலும் பல்மருத்துவம் படிக்க வாய்ப்பு பெற்றாலும் கல்வி கட்டணம் ரூ 9,600 செலுத்த வேண்டும், 

அரசு ஒதுக்கீட்டில் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் பொதுப் பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்த மாணவருக்கு எம்பிபிஎஸ் அல்லது பல் மருத்துவம் சேர ஒதுக்கீடு பெற்றால் கல்வி கட்டணமாக ரூ. 25,000 ரூபாயைச் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், அருந்ததியினர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்குக் குறைவாக இருந்தால் கல்வி கட்டணமாக 25,000 ரூபாய் செலுத்துவதில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

சுயநிதிக் கல்லூரி இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களைத் தேர்தெடுப்பவர்கள் கல்வி கட்டணத்துக்கான வரைவோலையை சமர்ப்பித்த பின்பு மீண்டும் திரும்ப பெற முடியாது. முதல் கட்ட கலந்தாய்வில் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்க பெறாமல் ஏதேனும் ஒரு கல்லூரியில் இடம் கிடைத்து சேர்ந்தவர்களுக்கு, இரண்டாம் கட்ட கலந்தாய்வில் விரும்பிய கல்லூரியில் இடம் இருக்கும்போது மாறிக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். ஆனால், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள், விளையாட்டுப் பிரிவைச் சார்ந்த மாணவர்களுக்கு இடம் மாறிக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. 

ஒவ்வொரு நாளும் பொதுமருத்துவத்திலும், பல் மருத்துவத்திலும் அரசு ஒதுக்கீட்டிலும், சுயநிதி மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டிலும் எவ்வளவு இடங்கள் காலியிடங்களாக இருக்கின்றன என்ற விவரங்கள் www.tnhealth.org / www.tnmedicalselection.org இணையத்தளங்களில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close