Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கால்நடைகளுக்கு 13-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசித் திட்டம்!

 "தமிழகத்தில் 32 மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமம் மற்றும் குக்கிராமங்களில் தேசிய கோமாரி நோய் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 12 சுற்றுகள் கால்நடை தடுப்பூசிப்பணி முடிவடைந்துள்ளது. தற்போது, செப்டம்பர் 1-ம் தேதி முதல் 21- ம் தேதி வரை 13-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப்பணி, கரூர் மாவட்டத்தில் அனைத்துக் கிராமங்களிலும் உள்ள 1 லட்சத்து 90 ஆயிரத்து 100 பசுவினங்கள் மற்றும் எருமையினங்களுக்கு போடப்பட இருக்கிறது" என்று கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

               

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இப்பணி செவ்வனே நடைபெறும் பொருட்டு, இந்நோய்க்கான ஊநீர் அதற்கான உருவாக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட அறையில் தயார்நிலையில் வைக்கப்பட உள்ளது. அங்கிருந்து ஒவ்வொரு கிராமத்துக்கும் தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட நாளில், இத்தடுப்பூசி பணிக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசிக் குழுவினர் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் தற்போது உள்ள அனைத்து பசுவினம் மற்றும் எருமையினங்களை கணக்கிட்டு, அவையனைத்துக்கும் தடுப்பூசி போடப்படவுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் 100 சதவிகிதம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இதுதொடர்பாக கிராமப்புற விவசாயிகளிடம் விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்துக் கிராமங்களிலும் 15.8.2017 அன்று நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் மக்கள் அனைவரும் பங்கேற்று கால்நடை மருத்துவர்கள் கூறும் அறிவுரையின்படி கால்நடைகளை குறிப்பிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது. கோமாரி நோயானது, குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்நோயினால், இறப்புகள் குறைவாக இருந்தபோதிலும், கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறைவு மற்றும் எருதுகளின் வேலைத்திறன் குறைவு, கறவை மாடுகளின் சினைப்பிடிப்பு தடைப்படுவது, இளங்கன்றுகளின் இறப்பு போன்ற பாதிப்புகளினால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. 

மேலும், இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலங்களில், நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வருதல், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசிப் போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களினால், விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. அதோடு, இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது. எனவே, கரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது மாடுகளுக்கு வரும் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கி 21- ம் தேதி வரை ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிட்ட நாளில் நடைபெறும் கோமாறி தடுப்பூசியைப் போட்டு, கோமாரி நோயில் இருந்து கால்நடைகளை காபந்து பண்ணிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close