Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எந்தக் கொம்பனாலும் எங்களை அசைத்துப் பார்க்க முடியாது- ஆவேசப்பட்ட எடப்பாடி!

எஃகு கோட்டை போன்ற அ.தி.மு.க-வை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது என தினகரனுக்கு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பதிலடிகொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. 

                                


எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அரியலூர் அரசுக் கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. நூற்றாண்டு விழாவுக்கு சபாநாயகர் தனபால் தலைமை வகித்தார்.  துணை முதல்வர் பன்னீர்செல்வம், அரசு தலைமைக்கொறடா தாமரை ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்தை திறந்துவைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

                                          


பின்னர், அனைத்துத் துறைகளின் சார்பில் 514 பயனாளிகளுக்கு ரூ.86 கோடியே 71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, ரூ.5 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் நிறைவடைந்த கட்டடப்பணிகளைத் திறந்துவைத்தும், ரூ.69 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் எடப்பாடி பழனிசாமி பேசத்தொடங்கினார்.

                        

அரியலூர் வரலாற்றுச் சிறப்புமிக்க மாவட்டமாகும், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அரியலூர் பகுதி கடலாக இருந்துள்ளது. இப்போது பல இடங்களில் அரிய கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கிடைத்துள்ளன. இதைப் பாதுகாக்கும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிலதா திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார். அதைத் தொடர்ந்து பணிகள் முடிவடைந்துள்ளன. கங்கைவரை படையெடுத்து வெற்றிபெற்றதன் நினைவாக ராஜேந்திரசோழனால் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் உலகப் புகழ்பெற்று திகழ்கிறது. இதுபோன்ற சிறப்பு மிக்க பல கோயில்கள் அரியலூர் மாவட்டத்தில் உள்ளன. இவ்வாறு சிறப்புவாய்ந்த அரியலூர் மாவட்டத்தில் இந்த விழா நடைபெறுவது சிறப்புமிக்க ஒன்றாகும்.

                           

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியிலும் குடிநீர் தட்டுபாடின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மணல் தட்டுப்பாட்டை போக்க அரசே மணல் குவாரியை எடுத்து நடத்தி வருகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்காக பல திட்டங்களை ஜெயலலிதா கொண்டுவந்துள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா கொண்டுவந்தார். குடிமராமத்து திட்டம் விவசாயிகளுக்கு வரப்பிரசாத திட்டம். இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தடுப்பணைகள் கட்ட இந்த ஆண்டு 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவுக்கான விருது  4 முறை பெறப்பட்டுள்ளது.  ரூ.2,247 கோடி வறட்சி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அதிகரித்துள்ளது. கல்வியில் இந்த அரசு புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. ஜெயலலிதாவின் திட்டங்கள் அனைத்தும் உயிரோட்டமான திட்டமாகும். ஆட்சிக்கும் கட்சிக்கும் சிலர் துரோகம் செய்கிறார்கள்.

                   

ஜெயலலிதாவின் ஆன்மா எங்களுடன் உள்ளவரை கழகத்தையும், ஆட்சியையும் எவராலும் அசைக்க முடியாது. மக்கள் மனதிலிருந்து அகற்றவும் முடியாது. ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மருதையாற்றில் கூடுதலாக மேம்பாலம் உள்ளிட்ட பல புதிய திட்டங்களையும் முதல்வர் அறிவித்தார். முன்னதாக, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் வைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close