Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போராட்டத்தில் இறங்கும் எம்.எல்.ஏ-க்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களான பிரின்ஸூம், ராஜேஷ்குமாரும் இணைந்து மக்கள் பிரச்னைகளுக்காக அடிக்கடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கோரி தினமும் போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடுகின்றனர். தங்கள் தொகுதியை தாண்டியும் இவர்களின் போராட்டம் தொடர்கிறது. குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் ராஜேஷ்குமார் இருக்கிறார். இந்நிலையில், குமரி மாவட்டம் சுவாமியார் மடம் அருகே உள்ள காட்டத்துறை ஊராட்சியில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, குடிநீர், சுகாதாரம் போன்றவை சரிவர  செய்துகொடுக்கப்படாமல் இருப்பதாகப் புகார் வந்துள்ளது.

இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த காங்கிரஸ் கட்சி, காட்டாத்துறை ஊராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் எம்.எல்.ஏ-க்களான  ராஜேஷ்குமாரும், பிரின்ஸூம் கலந்துகொண்டு, கண்டன உரையாற்றினார்கள். சுமார் 150-க்கும் மேற்பட்ட காங்கிரஸார் இதில் கலந்துகொண்டனர். அவர்கள் காட்டாத்துறை ஊராட்சி மக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக செய்துகொடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினார்கள். எம்.எல்.ஏ-க்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close