Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இருநாட்டு எல்லையில் பாலம் கட்ட நேபாளத்துக்கு இந்தியா ரூ.158 கோடி நிதியுதவி!

இந்தியா பிரதமர்  மோடி

நேபாளத்துக்கு இந்தியா ரூ.158 கோடி நிதியுதவி அளிக்கிறது. இரு நாடுகளின் எல்லையில் மெச்சி நதி மீது பாலம் கட்ட,  நிதி வழங்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்தை வேகப்படுத்த, இந்தப் பாலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய - நேபாள எல்லையில், மெச்சி நதி மேல் புதிய பாலம் கட்டுவதற்கு  இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஆகஸ்ட் 23-ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. கட்டுமானச் செலவு, பணிக்கான கெடு, பாதுகாப்பு விஷயங்கள் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் இடம் பெறும். இந்தப் பாலத்தைக் கட்ட, ரூ.158.66 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதியை, ஆசிய வளர்ச்சி வங்கிமூலம் இந்திய அரசு வழங்குகிறது. தேசிய நெடுஞ்சாலை 327 பி–யில் கக்கர்விட்டாவிலிருந்து (நேபாளம்) பனிடங்கி (இந்தியா) புறவழிச்சாலையை மேம்படுத்த இந்தப் பாலம் கட்டப்படுகிறது. இந்தியாவிலிருந்து நேபாளத்துக்குச் செல்லும் ஆசிய நெடுஞ்சாலை 02-ன் முடிவில் மெச்சி பாலம் அமைய உள்ளது. இது, நேபாளத்துக்குச் செல்லும் முக்கிய இணைப்பு வழி.

இந்தப் பாலம் கட்டப்படுவதால், இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்து இன்னும் எளிதாகும். பயண நேரம் குறையும். இரண்டு நாடுகளுக்கும் இடையே எல்லைப்புற வர்த்தகத்தை அதிகப்படுத்த வாய்ப்பு உருவாகும். தொழில்துறை, சமுதாய மற்றும் கலாசார பரிவர்த்தனைகளும் பலப்படுத்தப்படும். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும். நேபாள அரசுடன் கலந்தாலோசித்த பின்னர் திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பால வடிவமைப்பு இறுதிசெய்யப்பட்டுவிட்டது. மேலும், போதை மருந்துப் பொருள்களின் சட்டவிரோத கடத்தலைத் தடுக்க, நேபாளத்துடன் போதை மருந்து கடத்தல் தடுப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. நேபாள நாட்டின் பிரதமர் ஷேர் பகதுார் துபா, நேற்று இந்தியா வந்துள்ளார். அவரை பிரதமர் மோடி வரவேற்றுப் பேசினார். இரு நாடுகளுக்கும் இடையே இன்று பல்வேறு திட்டங்கள்குறித்து ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close