Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’இதில் நாங்கள் எங்கே வந்தோம்..?’ - நீட் முடிவால் கொதிக்கும் திருநங்கைகள்!

நீட் தேர்வில் திருநங்கைகள் ஐந்து பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக வெளியான அரசு அறிவிப்பில் சந்தேகம் உள்ளதாகத் திருநங்கைகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

நீட் முடிவுகள்


நீட் தேர்வு அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 4-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மருத்துவக் கலந்தாய்வுக்கான பணிகளைச் சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக, நேற்று மருத்துவக் கலந்தாய்வுக்கான ரேங்க் பட்டியல் சென்னையில் வெளியிடப்பட்டது. நீட் தேர்வு முடிவுகள் பட்டியலில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தேர்வு எழுதியவர்கள் மற்றும் தேர்வானவர்களின் பட்டியல், ஆண், பெண், திருநங்கைகள் எனப் பிரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதில் திருநங்கைகளுக்கான பிரிவில் 8 திருநங்கைகள் தேர்வுக்கு விண்ணப்பித்து எழுதியதாகவும், அதில் ஐந்து பேர் தேர்ச்சி அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரேஸ் பானுநீட் முடிவுகளில் குறிப்பிடப்பட்டதுபோல் தேர்வான அந்த ஐந்து திருநங்கைகள் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும் எனத் திருநங்கைகள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். இதுகுறித்து திருநங்கை உரிமைகளுக்கான ஆர்வலர் கிரேஸ் பானு கூறுகையில், “நீட் தேர்வில் ஐந்து திருநங்கைகள் தேர்வாகியுள்ளதாக முடிவுகள் பட்டியல் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. திருநங்கைகள் தேசிய அளவிலான ஒரு தேர்வில் தேர்வாகியிருப்பது பெருமைக்குரிய விஷயமே. ஆனால், தேர்வான அந்த ஐந்து திருநங்கைகளின் விவரங்கள் குறித்து இதுவரையில் அரசு வெளியிடாமல் இருப்பது நீட் முடிவுகள் பட்டியலின் மேல் உள்ள உண்மைத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

அவ்வாறு ஐந்து திருநங்கைகள் தேர்வாகியிருந்தால் முதலில் அரசு அவர்களின் விவரங்களை வெளியிட வேண்டும். இதேபோல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண்மை படிப்புக்கான நுழைவுத்தேர்வில் ஒரு திருநங்கை தேர்வாகியுள்ளார் எனப் பெருமையாக அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால், அதன் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியபோது, அப்படி எந்தவொரு திருநங்கையும் தேர்வாகவில்லை என்ற உண்மை தெரிய வந்தது. அந்த வேளாண் சேர்க்கை இடம் வேறொருவரால் நிர்வாகத்தால் நிரப்பப்பட்டிருந்தது. இதே நிலை நீட் தேர்விலும் ‘திருநங்கை’ என்ற மேற்கோளுடன் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதே எங்களின் தற்போதைய வேண்டுகோள்” என்றார்.

மேலும், நீட் தேர்வு முடிவுகளில் வெளியிடப்பட்டுள்ளவாறு ஐந்து திருநங்கைகள் தேர்வாகியுள்ளனரா என்பது குறித்து அறிய தகவல் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார் கிரேஸ் பானு என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close