Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தாமிரபரணியில் தொடரும் தண்ணீர் திருட்டு - கண்காணிக்க 11 குழுக்கள் அமைப்பு

தாமிரபரணி

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி நதியில் நடந்துவரும் தண்ணீர் திருட்டைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பயன்படுத்தும் தாமிரபரணி ஆற்றில் ஏற்கெனவே மணல் கொள்ளை நடந்தது. இதைத் தடுக்க நடந்த முயற்சிகள் தோல்வியடைந்ததால் ஆற்றில் மணலே இல்லாத நிலை உருவாகிவிட்டது. தற்போது தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் திருடப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த ஆண்டு போதுமான அளவுக்கு மழை பெய்யாததால் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் படு பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. பல இடங்களில் குடிப்பதற்குக்கூட தண்ணீர் கிடைக்காத நிலைமை உள்ளது.

தாமிரபரணி ஆறு

இந்தச் சூழலைப் பயன்படுத்தி ஆற்றில் இருந்து சட்ட விரோதமாக ஒரு கும்பல் தண்ணீரைத் திருடி விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறது. அத்துடன், ஆழமாக ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து அதில் இருந்து கிடைக்கும் தண்ணீரையும் விற்பனை செய்கிறார்கள். நாள்தோறும் ஆயிரக்கணக்கான டேங்கர் லாரிகளில் இது போன்று தண்ணீர் திருட்டு நடக்கிறது. அத்துடன் விவசாயத் தேவைக்காகக் கால்வாய்களில் திறக்கப்பட்ட நீரையும் இந்தக் கும்பல் லாரிகள் மூலமாக உறிஞ்சி எடுத்து விற்பனை செய்கிறது.

கலெக்டர் சந்தீப் நந்தூரிஇது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு சமூக நல அமைப்பினரும் புகார் தெரிவித்தனர். இதையடுத்து நெல்லையில் தண்ணீர் திருட்டைக் கண்காணிக்க 11 கண்காணிப்புக் குழுக்களை அமைத்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். தாமிரபரணியின் கால்வாய்களிலிருந்து சட்டத்துக்குப் புறம்பாகத் தன்ணீரை உறிஞ்சி எடுப்பதைத் தடுக்க இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை உள்ளிட்ட
11 குழுக்கள் தாமிரபரணியில் இருந்து மோட்டார்கள் மூலமாகத் தண்ணீரை எடுப்பது உள்ளிட்டவற்றைக் கண்காணிக்கும். சட்ட விரோதமாகச் செயல்படும் நபர்களை இந்தக் குழுவினர் கண்டுபிடித்தால், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்து உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close